ETV Bharat / bharat

இமாச்சல பிரதேசத்தில் உலகின் உயரமான பனிச்சறுக்கு விளையாட்டு தளம்!

author img

By

Published : Feb 4, 2023, 9:46 PM IST

இமாச்சல பிரதேசத்தில் பனியில் உறைந்துள்ள நாகோ ஏரியில் ஐஸ் ஸ்கேட்டின் போட்டி நடப்பதன் மூலம் இது உலகின் மிக உயரமான ஐஸ் ஸ்கேட்டிங் தளமாகியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் உலகின் உயரமான பனிச்சறுக்கு விலையாட்டு தளம்

கின்னகவுர்: இமாச்சல பிரதேசத்தில் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள நாகோ ஏரி பனிச்சறுக்கு எனப்படும் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டின் சிம்மாசனமாகியுள்ளது. பனியால் உறைந்து போயுள்ள இந்த ஏரி ஐஸ் ஸ்கேட்டிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவால் நடத்தப்பட்ட ஸ்கேட்டிங் போட்டிக்கு ஸ்கேட்டிங் தளமாக மாறியுள்ளது. இந்த ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் ஹிமாச்சல் ஐஸ் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் பர்கியுல் ஐஸ் ஸ்கேட்டிங் அசோசியேஷன் நாகோ ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் 15 மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 70 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

நாகோ ஏரிக்கு புதிதாக கிடைத்துள்ள பாராட்டுகளை உறுதிப்படுத்திய ஹிமாச்சல் ஐஸ் ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் ரோஷன் லால், "12,000 அடி உயரத்தில் உள்ள இந்த ஐஸ் ஸ்கேட்டிங் தளம் உலகிலேயே மிக உயரமான இயற்கை ஸ்கேட்டிங் தளம் ஆகும். மைனஸ் 18 டிகிரியில் அங்கு நடைபெறும் போட்டி பிப்., 5 நிறைவடைகிறது” என்றார்.

இதற்கிடையில், அண்டை மாநிலமான உத்தரகாண்டில், தேசிய அளவிலான ஆல்பைன் ஸ்கை மற்றும் ஸ்னோபோர்டு சாம்பியன்ஷிப் பிப்ரவரி 23 அன்று தொடங்கவுள்ளது. ஜோஷிமத்தில் நிலம் சரிந்ததால் தாமதமாக தொடங்கும் இந்த போட்டி நீண்ட கேபிள் கார் மூலம் ஜோஷிமத்துடன் இணைக்கப்பட்ட அவுலியில் நடைபெறும் என்று பனிச்சறுக்கு மற்றும் ஸ்னோபோர்டு செயலாளர் பிரவீன் சர்மாவின் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ள நிலையில், இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 48 அணிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரகாண்டின் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள அவுலி, அதன் பனி படர்ந்த சிகரங்களுக்கும், மலர்கள் நிறைந்த பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிற்கும், சார்தாம் யாத்ராவில் உள்ள நான்கு புனிதத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத் கோயிலுக்கும் அருகாமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.