ETV Bharat / bharat

வெடிகுண்டு தயாரித்து காவல்நிலையம் எடுத்துச் சென்ற இளைஞர்!

யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த இளைஞர், அதனை செயலிழக்கச் செய்ய தெரியாமல் காவல்நிலையத்திற்கே அந்த வெடிகுண்டை எடுத்துச் சென்ற நிகழ்வு மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

nagpur-man-makes-bomb-by-watching-youtube-video
வெடிகுண்டு தயாரித்து காவல்நிலையம் எடுத்துச் சென்ற இளைஞர்!
author img

By

Published : Jun 13, 2021, 7:45 PM IST

நாக்பூர்: ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்களில் சிலர், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து சாக்லெட், பிஸ்கட், டல்கோனா காபி போன்றவற்றை செய்து மகிழ்கின்றனர். இதில், சிலர் விதிவிலக்காக யூடியூப் வீடியோவைப் பார்த்து சாராயம் காய்ச்சுவது, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையிடம் வசமாக மாட்டியதை நாம் பார்த்தோம்.

அதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், யூடியூப் வீடியோ பார்த்து வெடிகுண்டைத் தயாரித்துள்ளார். இந்த வெடிகுண்டை ஒரு கட்டத்தில் செயலிழக்கச் செய்வது எப்படி என்று தெரியாமல் முழித்த அவர், காவல் நிலையத்திற்கு அந்த வெடிகுண்டை எடுத்துச் சென்றுள்ளார்.

அங்கு காவலர்களிடம் இந்த வெடிகுண்டு சாலையோரத்தில் இருந்ததாக கூறி ஒப்படைத்துள்ளார். இதில், சந்தேகமடைந்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்த, வெடிகுண்டைத் தயாரித்தது தான்தான் என்ற உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் குழுவினருக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்ததன் அடிப்படையில், வெடிகுண்டை அக்குழுவினர் செயலிழக்க வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: யூ-ட்யூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 சிறுவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.