தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நக்மா. இவர் தமிழில் பிரபுதேவாவுடன் 'காதலன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் ரஜினியுடன் 'பாட்ஷா', அஜித்துடன் 'சிட்டிசன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம், போஜ்பூரி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இப்படி நடிகையாக வலம் வந்த நக்மா, திரைத்துறையில் இருந்து விலகி சில ஆண்டுகளுக்கு முன் அரசியலில் இறங்கினார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார்.
-
Had taken my 1st dose of Vaccine a few days ago tested for Covid-19 yest, my test has come ‘Positive’ so Quarantined myself at home. All Please take care and take al necessary precautions even after taking the 1st dose of Vaccine do not get complacent in anyway manner #staysafe !
— Nagma (@nagma_morarji) April 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Had taken my 1st dose of Vaccine a few days ago tested for Covid-19 yest, my test has come ‘Positive’ so Quarantined myself at home. All Please take care and take al necessary precautions even after taking the 1st dose of Vaccine do not get complacent in anyway manner #staysafe !
— Nagma (@nagma_morarji) April 7, 2021Had taken my 1st dose of Vaccine a few days ago tested for Covid-19 yest, my test has come ‘Positive’ so Quarantined myself at home. All Please take care and take al necessary precautions even after taking the 1st dose of Vaccine do not get complacent in anyway manner #staysafe !
— Nagma (@nagma_morarji) April 7, 2021
தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நக்மா முதற்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ஆனால் அவர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையிலும், தற்போது அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "சில தினங்களுக்கு முன்பு கரோனாவுக்காக முதற்கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்டேன். நேற்று (ஏப்.07) எனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்.
முதற்கட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடியுங்கள். எந்த வகையிலும் மெத்தனமாக இருக்கவேண்டாம்" எனக் கூறியுள்ளார்.