மும்பை(மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில், நார்கேட் (Narkhed) தாலுகாவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி ஒருவர், 27 வயதான இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதன்காரணமாக சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக தனது காதலனிடம் கேட்டபோது, கருவைக் கலைக்கும்படி கூறி, சில மருந்துகளை வாங்கித் தந்துள்ளார். அந்த மருந்துகள் வேலை செய்யாததால்,தான் கர்ப்பமானது வெளியில் தெரிந்துவிடும் என அச்சமடைந்த சிறுமி, யூ-ட்யூபில் சென்று தீர்வு தேடியுள்ளார்.
யூ-ட்யூப் வீடியோக்களில் கூறிய மருந்துகளை வாங்கி, மருத்துவர்களின் ஆலோசனையின்றி தானே பயன்படுத்தியுள்ளார். இதனால் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதையறிந்த அவரது தாயார், உடனடியாக சிறுமியை நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
மருத்துவ சிகிச்சையில் நல்வாய்ப்பாக சிறுமி உயிர் பிழைத்துள்ளார். தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் காதலனை கைது செய்தனர்.
இதையும் படிங்க : விபரீத போட்டோஷூட்.. ஆற்றில் விழுந்த புதுமண தம்பதி... கவலைக்கிடம்!