ETV Bharat / bharat

"ஒவ்வொரு வாழ்க்கை போராட்டத்திலும், ஒரு தாயின் உறுதி உள்ளது" பிரதமர் மோடி உருக்கமான பதிவு - குழந்தை பருவத்தில் அவரது தாயுடன் கழித்த சில சிறப்பு தருணங்களை நினைவு

"என் அன்னையின் வாழ்க்கைப் பயணத்தில், அவரைப் போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை என்பதை உணர்கிறேன். ஒவ்வொரு இழப்பின் பின்னணியிலும், ஒரு தாயின் ஒளிமயமான கதை உள்ளது. ஒவ்வொரு போராட்டத்திற்கும் மேலே, ஒரு தாயின் வலுவான உறுதிப்பாடு உள்ளது என்று பிரதமர் மோடியின் உருக்கமாக தெரிவித்தார்.

தனது தாயார் ஹீராபென் தியாகம் குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி.. அன்னையின் அற்புதம் நிறைந்த தியாகம்...

author img

By

Published : Jun 18, 2022, 4:16 PM IST

Updated : Jun 18, 2022, 9:59 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது தாய் ஹீராபாய் 100ஆவது பிறந்த நாளையொட்டி தனது பிளாக்கில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நெகிழ்தன்மையின் சின்னம்: “எனது அன்னை எவ்வளவு அற்புதமானவரோ, அவ்வளவு எளிமையானவர். எல்லா தாய்மார்களையும் போல. என் பாட்டியின் முகத்தையோ, அல்லது அவர் மடியில் தவழும் சுகத்தையோ என் தாய் நினைவில் கொள்ளவில்லை. தாய் இல்லாமலேயே ஒட்டுமொத்த சிறுவயதையும் கழித்தார். வத்நகரில் மண் சுவர்களிலும், களிமண் ஓடுகளாலாலும் கட்டப்பட்ட சிறிய வீட்டில் உடன் பிறந்தோருடன் தான் தங்கியதை என்னிடம் நிறைய முறை சொல்லிருக்கிறார். அவரது வாழ்வில் சந்தித்த இன்னல்களையும், அதனை வெற்றிகரமாக சமாளித்த அவரது தைரியத்தையும் அவர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

100 ஆவது பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென்...

வீட்டு செலவுகளைச் சமாளிப்பதற்காக சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவியதுடன் சர்க்காவில் நூல் நூற்கவும் செய்தார். மழையின்போது, எங்கள் வீட்டுக் கூரை ஒழுகி, வீடும் வெள்ளத்தால் நிறையும். நீர் சொட்டும் இடங்களில் எனது தாய் வாளிகளையும், பாத்திரங்களையும் வைப்பார். இதுபோன்ற மோசமான நிலையிலும் நெகிழ்தன்மையின் சின்னமாக என் தாய் விளங்கினார். தூய்மையான பழக்கவழக்கங்களுக்கு அவர் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். வத்நகரில் தம் வீட்டின் அருகே இருக்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய யாரேனும் வரும்போதெல்லாம், அவருக்கு தேனீர் வழங்காமல் இருக்க மாட்டார்.

பிறரது மகிழ்ச்சியில் இன்பம்: என் தந்தையின் மிக நெருங்கிய நண்பர் ஒருவர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்தார். அவரது அகால மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் அப்பாசை என்பவரை என் தந்தை எங்கள் வீட்டிற்கு அழைத்துவந்தார். அவர் எங்களுடன் தங்கியிருந்து, தமது படிப்பை நிறைவு செய்தார். உடன்பிறந்தவர்களுக்கு செய்ததைப் போலவே, என் தாய் அப்பாசிடமும் பாசமாகவும், அக்கறையுடனும் இருந்தார். ஒவ்வொரு வருடமும் ஈத் பண்டிகையின்போது அவருக்குப் பிடித்த உணவு வகைகளை செய்வார். பண்டிகைகளின் போது, அன்னையின் சிறப்பு உணவுகளை ருசி பார்ப்பதற்காக அருகில் இருக்கும் குழந்தைகளும் எங்கள் வீட்டிற்கு வருவது வாடிக்கையாக இருந்தது.

இரண்டு தருணங்களில் மட்டுமே வெளிப்படையாக எனது தாயார் என்னுடன் பயணித்துள்ளார். முதலாவதாக, ஏக்தா யாத்திரையை நிறைவு செய்த பிறகு, லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய பிறகு, அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் எனது நெற்றியில், தாய் திலகமிட்டார். இரண்டாவது, 2001ஆம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்ட போது என்னுடன் இருந்தார்.

முறையான கல்வி கற்காமலேயே, அனுபவத்தை கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் உணர்த்தினார். அவரது எண்ண ஓட்டமும், தொலைநோக்கு சிந்தனையும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளன. பொறுப்புள்ள குடிமகனாக, பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை, தேர்தல் காலம் தொடங்கியதிலிருந்து அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துவருகிறார்.

மிகவும் எளிமையான வாழ்க்கை: எனது தாயின் பெயரில் இன்று கூட எந்த சொத்துக்களும் இல்லை. எந்த தங்க நகைகளை அவர் அணிந்தும் நான் பார்த்ததில்லை. அதில் அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை. முன்புபோலவே, தமது சிறிய அறையில் மிகவும் எளிமையான வாழ்க்கையை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். தினமும் எவ்வளவு நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பீர்கள். என்ன பார்ப்பீர்கள் என்று அண்மையில் நான் அவரிடம் கேட்டேன். தொலைக்காட்சிகளில் பெரும்பாலானோர் ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக் கொள்வதை பாத்திருக்கிறேன். இதனை நாளடைவில் தவித்துவிட்டேன். அமைதியாக செய்தி வாசிப்பவரையும், அனைத்து விஷயங்களை விளக்குபவர்களையும் மட்டுமே காண்பதாகவும் பதிலளித்தார். இதனைவர் கவனித்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பிறரது விருப்பங்களுக்கு மரியாதை தருவதுடன், அவரது கருத்துகளைப் புகுத்துவதை தவிர்ப்பார். என் விஷயத்திலேயே, எனது முடிவுகளை அவர் மதித்ததோடு, எந்த தடங்கலும் செய்யாமல், என்னை ஊக்கப்படுத்தினார். என்னுள் வேறுபட்ட மனநிலை உருவாகி வருவதை சிறுவயதிலேயே அவரால் உணந்துகொள்ள முடிந்தது. தமது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தபோது “உன் மனம் சொல்வது போல் செய்” என்று கூறினார்.

ஏழைகள் நலனில் அக்கறை:

ஏழைகள் நலனில் வலுவான உறுதிப்பாடு கொள்ளவும், கவனம் செலுத்தவும் எப்போதும் என்னை ஊக்குவிப்பார். 2001ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக நான் பதிவியேற்ற பிறகு அவரை சந்திக்கச் சென்றேன், “அரசியலில் உனது பணி பற்றி எனக்குப் புரியாது. இருந்தாலும், ஒருபோதும் நீ லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும். தம்மைப் பற்றி கவலைப்படாமல் மிகப்பெரிய பொறுப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். எந்த தவறான காரியத்தையோ அல்லது பிறருடன் தவறான செயல்களையோ செய்யாமல், ஏழைகளுக்காக தொடர்ந்து பணியாற்று" கட்டளை இடுவார்.

தனது தாயார் ஹீராபென் தியாகம் குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி.. அன்னையின் அற்புதம் நிறைந்த தியாகம்...
தனது தாயார் ஹீராபென் தியாகம் குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி.. அன்னையின் அற்புதம் நிறைந்த தியாகம்...

நேர்மையும், சுயமரியாதையும் அவரது மிகப்பெரிய குணநலன்கள். வறுமை மற்றும் அது சார்ந்த சவால்களுடன் போராடியபோதும், நேர்மையின் வழி தவறியோ அல்லது தங்களது சுயமரியாதையை விட்டுக் கொடுத்தோ வாழ்க்கை நடத்தியதில்லை. தொடர்ச்சியான கடின உழைப்பு தான் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும். அதுவே அவரது தாரக மந்திரமாக இருந்தது. என் அன்னையின் வாழ்க்கைப் பயணத்தில், இந்திய பெண்களின் தவம், தியாகம் மற்றும் பங்களிப்பை நான் காண்கிறேன்.

என் தாய் மற்றும் அவரைப் போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களை நான் பார்க்கும் போதெல்லாம், இந்திய பெண்களால் சாதிக்க முடியாதது என்பது எதுவும் இல்லை என்பதை உணர்கிறேன். ஒவ்வொரு இழப்பின் பின்னணியிலும், ஒரு தாயின் ஒளிமயமான கதை உள்ளது. ஒவ்வொரு போராட்டத்திற்கும் மேலே, ஒரு தாயின் வலுவான உறுதிப்பாடு உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாயின் 100ஆவது பிறந்தநாள்: பாதப்பூஜை செய்து ஆசி பெற்ற பிரதமர்

Last Updated : Jun 18, 2022, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.