மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா, வெர்சோவா, மீரா சாலை பகுதிகளில் நேற்றிரவு போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போதைப் பொருள் பறிமுதல் செய்யபட்டு வைத்திருப்பதாக என்சிபி தெரிவித்துள்ளது.
இதேபோல், கடந்த ஜனவரி 1ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 100 கிராம் மெபெட்ரோன் (எம்.டி) என்ற போதை பொருள் வைத்திருந்ததாக, மூன்று பேரையும் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்படும் அமைப்பினர் தொடர்ந்து இயங்கிகொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர் சமீர் வான்கடே கூறுகையில், கடந்த மூன்று மாதங்களில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பை மற்றும் கோவாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்டறிய என்சிபி தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது என்றார்.
கடந்த ஒராண்டில் போதை பொருட்கள் வைத்திருந்ததாக சுமார் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து மெபெட்ரோன், போதை மாத்திரைகள் போன்ற பல்வேறு வகையான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.