மும்பை: மும்பையில் ஒரே மைதானத்தில் இரண்டு தரப்பு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மற்றொரு போட்டியில் அடிக்கப்பட்டு பந்து அருகில் விளையாடிக் கொண்டு இருந்த மற்றொரு போட்டியில் பீல்டிங்கில் நின்றிருந்தவர் 52 வயது மதிக்கத்தக்கவர் தலையில் தாக்கிய நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்த மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, குச்சி விசா ஓஸ்வால் விகாஸ் லெஜண்ட் கோப்பைக்காக 52 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான, டி20 போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியானது, தாதர் பார்சி காலணி ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதில், அந்த 52 வயதான பிஸினஸ்மேனும் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ஒரு போட்டியில் அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மற்றொரு போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்தானது அவரது காதுக்குப் பின்னால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளது. இதனால், அவர் மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்துள்ளார். அதன் பிறகு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அவரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் படி மாலை 5 மணியளவில் அவர் இறந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தண்ணீர் பாட்டிலில் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துகள்கள்! அச்சுறுத்தும் மைக்ரோ பிளாஸ்டிக்! தீர்வு என்ன?