ETV Bharat / bharat

சச்சின் வாஸேவின் என்ஐஏ விசாரணை நீட்டிப்பு - மன்சுக் ஹிரென்

மும்பை: முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருள்களுடன் நின்ற வாகனம் குறித்த வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல் துறை அலுவலரான சச்சின் வாஸேவின் என்ஐஏ(தேசிய புலனாய்வு முகமை) விசாரணை ஏப்ரல் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சச்சின் வாஸே
சச்சின் வாஸே
author img

By

Published : Apr 3, 2021, 7:36 PM IST

மகாராஷ்டிர மாநிலம், மும்பை அல்டாமவுண்ட் சாலையில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருள்களுடன் நின்ற வாகனம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த வாகனத்திலிருந்து ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வாகனத்திலிருந்து மிரட்டல் கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.

தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனை, இறந்த நிலையில் காவல் துறையினர் கண்டெடுத்தனர். தேசிய புலனாய்வு அமைப்பு இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டுவருகிறது.

தற்போது, சச்சின் வாஸேவின் காவலை தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் ஏப்ரல் 7ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த மார்ச் 13ஆம் தேதி, இவ்விவகாரத்தில் மும்பை காவல் ஆய்வாளர் சச்சின் வாஸே கைது செய்யப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.