ETV Bharat / bharat

முல்லை பெரியாறு.. நாளை விசாரணை!

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு கட்டமைப்பு பிரச்சினைகளை பேசித் தீர்க்கலாம் என தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் வழக்கு செவ்வாய்கிழமை (மார்ச் 29) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Mullaperiyar Dam
Mullaperiyar Dam
author img

By

Published : Mar 28, 2022, 7:32 PM IST

புது டெல்லி : முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் புதிய அணை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கேரளா பிரச்சினை எழுப்பியுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டத்தையும் 142 அடியில் இருந்து 140 அடியாக குறைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாற்றில் 1895ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு, கேரளம் இடையே இன்னமும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில் அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், “அணைக்கு எந்தவொரு புத்துயிரும் அளிக்க முடியாது. ஒரு அணையை இத்தனை ஆண்டுகள் தான் சேவையில் வைத்திருக்க முடியும் என கால வரம்பு உள்ளது. மேலும் அணையின் நீர்மட்டத்தையும் 142 அடியிலிருந்து 140 அடியாக இரண்டு அடி குறைக்க வேண்டும்” எனக் கோரியுள்ளது.

முன்னதாக இந்த மனு மார்ச் 24ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஎஸ் ஓகா (A S Oka ) மற்றும் சிடி ரவிக்குமார் (C T Ravikumar) ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “126 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், கண்காணிப்பு குழு மூலம் பிரச்சினையை தீர்க்கலாம் என தமிழ்நாடு-கேரளா உள்ளிட்ட இரு மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.

இந்த மனு செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நாளைய விசாரணையின்போது, அணையின் பாதுகாப்பு, நீர்மட்டத்தை குறைத்தல் மற்றும் புதிய அணை குறித்து கேரளா தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் எனத் தெரியவருகிறது.

இதையும் படிங்க : முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை.. கேரளா திட்டம்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.