போபால்: மத்திய பிரதேச மாநிலம் மந்த்சூரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள காந்தி சாகர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது.
அந்த வகையில் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு அருகே உள்ள டோலகேடி கிராமத்தில் உபரிநீர் சாலை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சாலை வழியாக நேற்று (அக். 16) சென்ற 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 7 பேர் அடித்து செல்லப்பட்டனர். அதில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
2 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 2 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் விவசாயப்பணிகளை செய்துவிட்டு வீடுகளுக்கு செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் சாலையை ஒருவரையொருவர் கைகளை பிடித்துக் கொண்டு கடக்க முயன்ற போது அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை