போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற, மோடியை 'கொல்ல வேண்டும்' என, முன்னாள், எம்.பி.யும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ராஜா படேரியா என்பவர், கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பன்னா மாவட்டத்தில் உள்ள பாவாய் நகரில் நடைபெற்ற இந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் "பிரதமர் மோடி மக்களை சாதி, மதம், மொழி அடிப்படையில் பிரிப்பார். இதனால் பட்டியலின, பழங்குடியினர், சிறுபான்மையினரின் உயிருக்கு ஆபத்து. அதனால் அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் மோடியைக் ’கொல்லத்’ தயாராக இருங்கள்", என்றார்.
கூட்டத்தில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, மத்தியப்பிரதேச மாநில அரசு அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், படேரியா தான் பேசியதை மறுத்துள்ளார். மேலும் அவர் பேசும்போது மோடியை தோற்கடிக்க வேண்டும் என பேசியது கொல்ல வேண்டும் என தவறாக சித்தரிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாட்டுக்கு தேவை வளர்ச்சியே, குறுக்குவழி அரசியல் அல்ல.. பிரதமர் நரேந்திர மோடி..