கொல்க்வான்: கரோனா தொற்று காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.
ஜெய் பில்லர் சவுக்கில் பகுதியில் குடோனில் கள்ளத்தனமாக ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. தகவலின் அடிப்படையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு குடோனில் மறைத்து வைத்திருந்த சுமார் 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, ரேவாவை தளமாகக் கொண்ட மற்றொரு நிறுவனமான திரிவேணி எரிவாயு நிறுவனம் சோதனை செய்யப்பட்டது. அங்கு சுமார் 113 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழப்பு