ETV Bharat / bharat

பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 15 கிலோ தங்கம் கொள்ளை - gold theft

மத்தியப் பிரதேசத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியுடன் நகைக்கடன் தரும் அலுவலகத்தில் நுழைந்த நபர்கள் 15 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 15 கிலோ தங்கம் கொள்ளை

author img

By

Published : Nov 26, 2022, 10:32 PM IST

கட்னி: மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் உள்ள மணப்புரம் கோல்டு லோன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 26) துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் ரூ.7 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கிளையின் விற்பனை மேலாளர் ராகுல் கோஸ்டா கூறுகையில், “காலை 10.30 மணியளவில், கைகளில் துப்பாக்கிகளுடன் நான்கு இளைஞர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து, சுட்டுவிடுவோம் என்று மிரட்டி உதவிக் கிளை மேலாளரிடம் இருந்து சாவியைப் பறித்து 15 கிலோ தங்கம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு, தப்பிச் சென்றனர். அதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்" என தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.கொள்ளையடித்தவர்களை அதே பகுதியில் நேற்று பாரத்ததாக உள்ளூர் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களை விரைவில் பிடிப்போம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.16.5 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.