அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கட லட்சுமியம்மாள்(55). இவரது மகன் வெங்கடசாமி(36). இவர்கள் இருவரும் இன்று(பிப்.23) இரு சக்கர வாகனத்தில் கிராமத்தில் இருந்து மலைக்குச் செல்லும் போது வழியில் அறுந்து கிடந்த மின்கம்மியைக் கவனிக்காமல் வண்டியைச் செலுத்தியுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மறுத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொலையில் முடிந்த நிலத்தகராறு விவகாரம்