ETV Bharat / bharat

குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து விபத்து; 60க்கும் மேற்பட்டோர் பலி; பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

குஜராத் மோர்பியில் புகழ்பெற்ற கேபிள் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தில் இருந்த பொதுமக்கள் பலர் ஆற்றில் விழுந்தனர். 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

author img

By

Published : Oct 30, 2022, 10:49 PM IST

மோர்பி (குஜராத்): மோர்பியில் உள்ள புகழ்பெற்ற கேபிள் பாலம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. விடுமுறை என்பதால் நாட்களில் இந்த ஜூல்டா பாலத்திற்கு ஏராளமானோர் வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் பாலம் திடீரென்று உடைந்து ஆற்றில் விழுந்தது.

இதனால் பாலத்தில் இருந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் ஆற்றில் விழுந்தனர். 100க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் துரிதமாக மீட்புப் பணி தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த விபத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது.

குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வரலாற்றுச்சிறப்புமிக்க மோர்பி ஜூல்டா பாலம் ஓரேவா குழுமத்தால் 2 கோடி செலவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் பாலத்தை அடைந்தனர். மாலை நேரத்தில் பாலம் இடிந்து விழுந்து நூற்றுக்கணக்கான மக்கள் கீழே பாயும் மச்சுவா நதியில் மூழ்கினர். அதன்பேரில் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each of those who lost their lives in the mishap in Morbi. The injured would be given Rs. 50,000.

    — PMO India (@PMOIndia) October 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

மோர்பி விபத்து குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். மீட்புப் பணிகளுக்காக உடனடியாக குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். நிலைமையை உன்னிப்பாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'மோர்பியில் நடந்த விபத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இதுகுறித்து குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி மற்றும் பல அலுவலர்களிடம் பேசியுள்ளேன். உள்ளாட்சி நிர்வாகம், நிவாரணப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. தேசிய மீட்புப்படையினர் விரைவில் அந்த இடத்தை அடைவர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

இந்த துயரச்சம்பவம் குறித்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், 'நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறேன்.

மோர்பி சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் பேசி, நிலைமையை ஆய்வு செய்தார். முழு நிலவரத்தையும் பிரதமர் தொடர்ந்து கண்காணித்து, மீட்புப் பணிகள் தொடர்பாக தேவையான அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் அளித்துள்ளார்’ என்றார்.

  • गुजरात के मोरबी में हुए पुल हादसे की खबर बेहद दुःखद है। ऐसे मुश्किल समय में मैं सभी शोकाकुल परिवारों को अपनी गहरी संवेदनाएं व्यक्त करता हूं।

    सभी कांग्रेस कार्यकर्ताओं से अपील करता हूं कि दुर्घटना में घायल व्यक्तियों की हर संभव सहायता करें और लापता लोगों की तलाश में मदद करें।

    — Rahul Gandhi (@RahulGandhi) October 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராகுல் காந்தியும் இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார், அதில் அவர்,’குஜராத்தின் மோர்பியில் பாலம் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இத்தகைய கடினமான காலங்களில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறும், காணாமல் போனவர்களைக்கண்டறிய உதவுமாறும் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்”எனக்குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த துயரச் சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'குஜராத்தில் நடந்த துயரச்செய்தி எங்களுக்கு கிடைத்தது. மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ எனப்பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன்: பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.