ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி வியாழக்கிழமை (மார்ச் 25) அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜரானார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி மீது பணமோசடி குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ஆஜராக அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்று ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ஆஜரானார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை கண்டித்து குரல் எழுப்பிய நிலையில் மத்திய அரசு இவரை ஓராண்டு காலம் வீட்டுச் சிறை வைத்திருந்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : சக்கர நாற்காலி வேலை செய்யாது- மம்தாவை சீண்டும் பாஜக!