டெல்லி: 83ஆவது சீனியர் தேசிய மற்றும் மாநிலங்களுக்கிடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி இன்று (ஏப்.18) நடைபெறுகிறது. இந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக, நேற்று (ஏப்.17) தேதி விஷ்வா தீனதயாளன் டாக்சியில் ஷில்லாங் நோக்கி சென்றார். அவருடன் சக நண்பர்கள் ரமேஷ் சந்தோஷ் குமார், அபினாஷ் பிரசன்னாஜி ஸ்ரீநிவாசன், கிஷோர் குமார் ஆகிய மூவரும் உடனிருந்தனர்.
இந்த நால்வரும் பயணித்த டாக்சி, உமிலி செக்போஸ்ட் அருகில் உள்ள சங்பங்லா என்ற இடத்தில் கோர விபத்தில் சிக்கியது. எதிரே வந்த 12 சக்கர சரக்கு வாகனம் டாக்சி மீது மோதியதில் டாக்சி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஷ்வா மற்றும் அவரது மூன்று நண்பர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில், வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய மருத்துவ மற்றும் மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் விஷ்வா தீனதயாளன் உயிரிழந்தார்.
விஷ்வாவின் மறைவுக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.
— Narendra Modi (@narendramodi) April 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.
— Narendra Modi (@narendramodi) April 18, 2022டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.
— Narendra Modi (@narendramodi) April 18, 2022
அதில், “டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர்களால் போற்றப்பட்ட இவர், பல போட்டிகளில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி” என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்