இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோர் 40 நிமிடங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதில் உள்ள முக்கியத்துவம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேசியுள்ளனர். இந்திய, ஜப்பான் நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், குவாட் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "பாதுகாப்பு, டிஜிட்டல் துறைகள் சார்ந்து பொருளாதார உறவு , மக்களுக்கிடையேயான உறவு ஆகியவற்றில் இந்திய, ஜப்பான நாடுகளுக்கிடையேயான உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.