சென்னை: சீனாவில் மீண்டும் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக சர்வதேச சா்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை உறுதி செய்யும் நோக்கில் பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை(டிச.27) சுகாதார ஒத்திகை நடைபெறவுள்ளது. ஒத்திகைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள சுகாதார வசதிகள், நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான படுக்கை வசதி, மருத்துவ ஆக்சிஜன்(O2) வசதி கொண்ட படுக்கைகள், அவசர சிகிச்சைக்கான படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவி இணைக்கப்பட்டுள்ள படுக்கைகள், போதிய எண்ணிக்கையிலான மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், ஆயுஷ் மருத்துவா்கள், ஆஷா, அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட மற்ற முன்களப் பணியாளா்கள் குறித்து ஒத்திகையின்போது ஆய்வு செய்யப்படவுள்ளது.
கரோனா மேலாண்மையில் பயிற்சி பெற்ற மருத்துவா்கள், செவிலியா்களின் எண்ணிக்கை, தீவிர பாதிப்புக்குள்ளானோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சிகளைப் பெற்ற பணியாளா்களின் எண்ணிக்கை, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை, ஆலையில் இயந்திரங்களை இயக்கப் பயிற்சி பெற்ற பணியாளா்களின் எண்ணிக்கை, நவீன மருத்துவ வசதிகள் கொண்ட அவசர ஊா்திகளின் எண்ணிக்கை, மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு, அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், அவற்றின் மூலப்பொருள்கள் கையிருப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
-
Tamil Nadu Health Minister Ma Subramanian visits Rajiv Gandhi Government Hospital in Chennai to review Covid Mock drill. pic.twitter.com/HEEduI7l38
— ANI (@ANI) December 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tamil Nadu Health Minister Ma Subramanian visits Rajiv Gandhi Government Hospital in Chennai to review Covid Mock drill. pic.twitter.com/HEEduI7l38
— ANI (@ANI) December 27, 2022Tamil Nadu Health Minister Ma Subramanian visits Rajiv Gandhi Government Hospital in Chennai to review Covid Mock drill. pic.twitter.com/HEEduI7l38
— ANI (@ANI) December 27, 2022
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பு ஒத்திகையை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் முக கவசம் கட்டாயம் - நியூ இயர் பார்ட்டிகளுக்கு கெடுபிடி!