மும்பை: மகாராஷ்டிராவில் மசூதிகள் உள்பட சட்டவிரோத கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை மே3ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் மே2ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மே3ஆம் தேதி ரம்ஜான், அட்சய திருதியை மற்றும் பரசுராமர் ஜெயந்தி வருவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக, மே3ஆம் தேதி காலக்கெடுவை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையில் இன்று (மே4) ஆங்காங்கே சில இடங்களில் மசூதிகளின் அருகில் ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் ஹனுமன் சாலிஸா பாடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பேசியுள்ள ராஜ் தாக்கரே, “மகாராஷ்டிராவில் 90-92 சதவீதம் மசூதிகள் காலை தொழுகையை சரியான சப்தத்தில் நடத்தியுள்ளன. எனினும் 135 மசூதிகளில் சப்தம் அதிகமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோத கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாநில அரசுக்கு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. மேலும் இது மசூதிக்கு மட்டுமல்ல, கோவில்கள் உள்பட இதர வழிபாட்டு தலங்களுக்கும் பொருந்தும். சட்டவிரோத கூம்பு ஒலிபெருக்கிகள் எங்கிருந்தாலும் அகற்றப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு!