மிசோரம் : வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மிசோரம் மாநிலத்தில் முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி (Mizo National Front) என்ற கட்சி ஆட்சி செய்து வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிசோ தேசிய முன்னணி, பு லால்சவ்தா தலைமையிலான காங்கிரஸ், லால்துஹோமம் தலைமையிலான சோரம் மக்கள் இயக்கம் (Zoram People's Movement ) இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், பாரதிய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தேர்தல் போட்டியில் முன்னணியில் உள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 21):
மிசோ தேசிய முன்னணி | காங்கிரஸ் | பாஜக | சோரம் மக்கள் இயக்கம் | |
---|---|---|---|---|
janki Baat | 10 - 14 | 05 - 09 | 0 - 2 | 15 - 25 |
India TV-CNX | 14 - 18 | 08 - 10 | 0 - 2 | 12 - 16 |
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படி மிசோரம் மாநிலத்தில், ஆளும் மிசோ தேசிய முன்னணி மற்றும் சோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் மதிப்பீடு எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரிக்கும் என கருதப்படுகிறது. எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் காங்கிரஸ் இருக்கும் என நம்பப்படுகிறது.
அதேநேரம் பாஜகவு ஒன்று அல்லது இரண்டு இடங்களை கைப்பற்றும் நிலையில், அதுவும் ஆட்சியை தீர்மானிப்பதில் திருப்பத்தை கொண்டு வரலாம். கருத்து கணிப்புகளிம் படி மிசோ தேசிய முன்னணிக்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துவராத நிலையில், அவர்களின் அடுத்த தேர்வாக பாஜக இருக்கலாம். அதேநேரம் மிசோ முன்னணி பாஜகவுடன் கூட்டணி வைக்குமா என்பதை தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே எதிர்நோக்க முடியும்.
இதையும் படிங்க : ஓய்ந்தது 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. ஆட்சியை இழக்கப் போவது யார்? கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!