டெல்லி: 2016-ல் காணாமல் போன, IAF AN-32 விமானம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் (NIOT) விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட AUV-V மூலம் இன்று (ஜன.12) கண்டுபிடிக்கப்பட்டது.
8 ஆண்டுகளுக்குப் பின்பு 2016-ல் காணாமல்போன, IAF AN-32 விமானத்தின் பாகங்களை சென்னையை தளமாகக் கொண்டு இயங்கும் தேசிய கடல் தொழில்நுட்பத்தின் (National Institute of Ocean Technology - NIOT) ஆராய்ச்சியாளர்கள் தயாரித்த நீருக்கடியில் ஆய்வு செய்யும் தன்னாட்சி வாகனத்தின் (Autonomous Underwater Vehicle - AUV) கருவிகளை சோதனை செய்தபோது, இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் ஆழ்கடலில் காணாமல்போன IAF AN-32 விமானத்தின் உதிரிபாகங்களை இக்கருவி கண்டுபிடித்துள்ளது.
2023, டிச.9-10 ஆகிய தேதிகளில் என்ஐஓடி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓசியோனோகிராபி, துருவம் மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் ஆகியற்றின் ஆராய்ச்சியாளர்கள் 'சாகர் நிதி' என்ற ஆராய்ச்சிக் கப்பலில் பயணம் செய்தனர். அதன்படி, சென்னையில் இருந்து சுமார் 310 கி.மீ., தொலைவில் சென்றப் பின்னர், AUV-ல் 3,400 மீ ஆழம் கொண்ட கடற்பரப்பின் மீது சில வித்தியாசமான உறுதித்தன்மை வாய்ந்தவைகள் இருப்பது அதன் சோனார் பிரதிபலிப்பில் தென்பட்டன.
தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட வலுவான சமிஞ்ஞைகள், கவனித்த ஆராய்ச்சியாளர்கள் அதனை தீவிரமாக ஆராய்வதற்கு ஆர்வம் கொண்டு AUV-யின் மூலம் ஆழ்கடலில் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் குதித்தனர்.
இது தொடர்பாக NIOT-ன் இயக்குனர் ஜி.ஏ.ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஆழ்கடலுக்குள் கொஞ்சம் மூழ்கிச் சென்று புகைப்படங்கள் எடுத்ததாகவும், அவை இந்திய விமானப்படையுடன் புவி அறிவியல் அமைச்சகம் மூலம் பகிரப்பட்டன' எனவும் கூறினார்.
இக்கருவியினால் ஆழ்கடலில் விபத்து நடந்து 8 ஆண்டுகளை எட்டிய நிலையில், இக்கருவியின் உதவியால் எடுத்த புகைப்படங்கள் மிகவும் தெளிவாக உள்ளதாகவும், இது 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன IAF AN-32 விமானத்தின் சிதைவுற்ற பாகங்கள் என இந்திய விமானப்படை அதிகாரிகள் உறுதி செய்ததாகவும் இயக்குனர் ஜி.ஏ.ராமதாஸ் மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து NIOT-ன் ஆழ்கடல் தொழில்நுட்ப நிபுணர் எஸ்.ரமேஷ் கூறுகையில், 'எங்களின் பயணத்தின் போது, வங்கக்கடலின் கடற்பரப்பில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இருந்து எங்களுக்கு வலுவான சிக்னல்கள் AUV-யின் மூலம் கிடைத்தன. இதைத்தொடர்ந்தே, ஆழ்கடலில் படுக்கையில் இருந்து சுமார் 5 கி.மீ., அளவிற்கு அங்கும் இங்குமாக குவியலாக கிடந்தவற்றின் அருகில் கருவியைக் கொண்டு சென்றோம்' என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக, மேலும் பேசிய மற்றொரு ஆராய்ச்சியாளர், 'ஆரம்பத்தில் ஏதோ, உடைந்த கப்பல் ஒன்றின் பாகங்கள் எனக் கருதப்பட்டதாகவும், பின்னர் அவற்றின் நெருக்கத்தில் சென்று பார்க்கவே, இந்திய விமானப்படையின் விமானத்தில் காணப்படும் மூவர்ணக் கொடியுடனான வட்டவடிவ இலச்சினையைக் கண்டு அடையாளம் கண்டோம். இது 2016, ஜூலை 22-ல் 29 பணியாளர்களுடன் காணாமல்போன IAF விமானம் என தெரியவந்தது.
NIOT மற்ற நிறுவனங்களின் உதவிகளுடன் கடற்பரப்பில் இதனைத் தேடும் பணியில் எங்களது துறை அதிகாரிகளும் ஈடுபட்டபோதும், கண்டுபிடிக்க முடியாமல் போனது' என்றார். இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமும், இப்புகைப்படங்களை ஆய்வு செய்து, இவை சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ., தொலைவில் ஆழ்கடலில் மூழ்கிய AN-32 விமானத்தின் பாகங்கள் தான் என உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இப்படங்கள் காணாமல் போன விமானத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்ததில் ஒத்துப்போவதாகவும், இவ்விபத்துக்குள்ளான இடத்தில் இவ்விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பும் எப்போதும் வரலாற்றில் நிகழ்ந்ததில்லை எனவும் இது IAF AN-32-க்கு சொந்தமானதாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நார்வே நாட்டில் இருந்து 2022-ல் வாங்கப்பட்ட (AUV) நீருக்கடியில் ஆய்வு செய்யும் தன்னாட்சி வாகனமானது, ஆழ்கடலில் சுமார் 6,000 மீ ஆழம் வரை பயணித்து அங்குள்ளவைகளை வரைபடங்கள் ஆக்கும் தன்மை கொண்டவை. இது வங்காள விரிகுடாவில் வாயு ஹைட்ரேட்டுகளைத் தேடும் பயணத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், AUV-வின் இக்கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, ஆழ்கடலில் இருந்து விமானத்தின் பாகங்களை மீட்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இந்திய விமானப்படை விமானம்; சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு?