கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடம் மாவட்டம் கே.சி. சாலையில் நேற்று (ஏப். 3) 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் காணாமல்போனதாக அப்பகுதி காவல் நிலையத்திற்குப் புகார் ஒன்று வந்தது. அத்துடன் அவர், பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்திவரும் நிலையில், கே.சி. சாலையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் சிறுவனின் உடல் தலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
அத்துடன் உடல் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் காவலர்கள் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: உலகளவில் 100 கோடி பதிவிறக்கம் தாண்டிய பப்ஜி