டெல்லி : கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் ’மிஸ் ட்ரான்ஸ் குயின் இந்தியா’ எனும் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடைபெற்ற நடப்பு ஆண்டுக்கான அழகிப் போட்டியில் திருநங்கை சைனி சோனி அழகிப் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார்.
ஆடை வடிவமைப்பாளரான இவர், அடுத்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச திருநங்கைககள் அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக சைனி சோனிக் கூறுகையில், "அழகிப் போட்டி மகுடத்தை வெல்வது என்பது பெருமை மட்டுமல்ல. எனது இந்த வெற்றியின் மூலம் சக மனிதர்களைப் போன்று எல்ஜிபிடி க்யூ சமூகத்தினரும் மனிதர்களே என்பதை மக்களிடையே உணர்த்துவேன். இந்த வாய்ப்பின் மூலம் சமுதாயத்திற்காகவும், திருநங்கைகளின் மேம்பாட்டிற்காகவும் உழைப்பேன்" என்றார்.
இதையும் படிங்க: டிச. 21ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஜோ பைடன்