ETV Bharat / bharat

ஆந்திர பள்ளி மாணவி தற்கொலை வழக்கு - பள்ளி முதல்வர் ராமேஸ்வரத்தில் கைது

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலையால் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய மாணவி படித்துவந்த பள்ளியின் முதல்வரை காவல்துறையினர் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியில் நேற்று கைது செய்தனர்.

ஆந்திர பள்ளி மாணவி தற்கொலை வழக்கு
ஆந்திர பள்ளி மாணவி தற்கொலை வழக்கு
author img

By

Published : Mar 27, 2022, 5:02 PM IST

அமராவதி (ஆந்திரப் பிரதேசம்): ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூரில் மாவட்டம், பலமனேரில் உள்ள பிரம்மர்ஷி உயர்நிலைப் பள்ளியில் மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். மிஸ்பா, நன்றாகப் படிக்கும் பள்ளியில் முதலிடம் பெறும் மாணவி எனத் தெரிய வருகிறது.

மிஸ்பா இன்னும் ஒருமாதத்தில் வரவிருக்கும் பொதுத்தேர்வுக்காக தயாராகி கொண்டிருந்த நிலையில், மார்ச் 23ஆம் தேதி, திடீரென தற்கொலையால் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மிஸ்பா நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் எடுத்து வந்ததால், அவர் உடன் படிக்கும் மற்றொரு மாணவிக்கு பொறாமை இருந்துள்ளது. அந்த மாணவியின் தந்தை ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக உள்ளவர்.

அந்த மாணவியின் தந்தை தனது மகள் மட்டுமே பள்ளியில் முதலிடம் பெற வேண்டும் எனவும், வேறு யாரும் முதலிடம் பெறக்கூடாது எனக் கூறியும் பள்ளி ஆசிரியரை மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் ஒருவர், நன்றாகப் படித்து வந்த மாணவி மிஸ்பாவுக்கு மாற்றுச்சான்றிதழ் அளித்து, பள்ளியை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலையால் உயிரிழந்தார் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், உயிரிழந்த மாணவி இரண்டு பக்க கடிதம் எழுதிவைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்தநிலையில், சித்தூர் மாவட்ட கல்வி அலுவலர் சேகர், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் முதல்வர் ரமேஷ் மற்றும் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும், காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளியின் முதல்வர் ரமேஷை தேடி வந்தனர். இந்தநிலையில், பள்ளி முதல்வர் ரமேஷ் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து நேற்று (மார்ச் 26) ஆந்திர அழைத்து வந்தனர்.

இதுகுறித்து சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் கூறுகையில், "மிஸ்பா படித்து வந்த பிரம்மர்ஷி பள்ளியின் நிர்வாகிகள் மிஸ்பாவிடம் பள்ளிக் கட்டணம் கேட்டு வற்புறுத்தியதாக விசாரணையில் தெரிய வருகிறது. எனினும் பள்ளி முதல்வர் ரமேஷிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: விஸ்வாசம் கதை போல் ஒரு சம்பவம்: அரசியல்வாதி அழுத்தத்தால் பள்ளி மாணவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.