திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள வயல்வெளியில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள், காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் அங்கு விரைந்த காவலர்கள், மூட்டையை கைப்பற்றினர். அந்த மூட்டையில், 68 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் படுகாயங்களுடன் இருந்தது. அந்த உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்கள் விசாரணையை தொடர்ந்தனர்.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், முதியவரை கொலை செய்தது நாங்கள்தான் என்றுக் கூறி சரணடைந்தனர். இது குறித்து சிறுமிகள் கூறுகையில், சம்பவத்தின்போது, அந்த முதியவர் எங்களது தாயிடம் அத்துமீற முயன்றார். இதனால் அவரை கோடரியால் தாக்கினோம். தாக்குதலால், உயிர்போனாது. உடனே உடலை சாக்கு மூட்டையில் கட்டி வயலில் வீசினோம் என்றனர். இதனடிப்படையில் வழக்கு பதிந்த காவலர்கள், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தாயை அரிவாளால் வெட்டி தீ வைத்த மகன் - ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சை