ETV Bharat / bharat

'பசிப்பிணி, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்' - பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மத்திய அரசுடனும், இதர மாநில அரசுகளுடனும் ஒன்றிணைந்து பசிப்பிணி, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

state food ministers meeting at delhi  MInister sakarabani said tamilnadu community kitchen plan  Tamilnadu minister sakarabani request to Central government community kitchen Bill  அமைச்சர் சக்கரபாணி டெல்லியில் பேச்சு  பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது  டெல்லியில் மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டமைப்பு
பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம்
author img

By

Published : Dec 22, 2021, 12:04 PM IST

டெல்லி: விஞ்ஞான் பவனில் நேற்று (டிசம்பர் 21) இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த மத்திய அரசின் வர்த்தகம் - தொழில் துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு - பொது விநியோகத் துறை, கைத்தறித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கலந்துகொண்டு பேசியதாவது, "நம் நாட்டில் பசி, ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படும் நிலையைப் போக்குவதற்காக சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கும் திட்டம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன்.

தமிழ்நாட்டின் உணவு திட்ட செயல்முறைகள்

தமிழ்நாட்டில் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பினை குறிப்பாக சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரங்கில் பதிவுசெய்வதற்கு வாய்ப்பு அளித்தமைக்காக அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானம், சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதிசெய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது.

2016 நவம்பர் 1 முதல் 'தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013' நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நிலையினைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அனைவருக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது.

சிறப்பு பொது விநியோகத் திட்டம்

தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான உணவுப் பொருள்கள் வழங்கும்பொருட்டு ‘சிறப்பு பொது விநியோகத் திட்டம்‘ அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை மானியம் அதிகம் கொடுத்து குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது.

பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முட்டை வழங்கும் திட்டம் 1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டில் வாரத்திற்கு ஐந்து நாள்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் அன்னதான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. நாள்தோறும் உத்தேசமாக ரூ.16.50 லட்சம் செலவில் 66 ஆயிரம் பக்தர்கள், ஏழை மக்களுக்கு முழு உணவு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றது.

பொங்கல் பரிசு

இதுமட்டுமில்லாமல், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் 978 கோடி ரூபாய் செலவில் 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருள்களும் 4000 ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டன.

வருகின்ற 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆயிரத்து 161 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.15 கோடி அட்டைதாரர்களுக்கு 20 வகையான உணவுப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன. தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக பல ஆண்டுகளாக நடத்திவருகிறது.

தூய்மையான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன்மூலம் வழங்கிவருகிறது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 407 உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன.

பேரிடர் காலங்களில் விலையின்றி உணவு

அதேபோல் மற்ற 14 மாநகராட்சிகளில் 105 உணவகங்களும், நகராட்சிகளில் 138 உணவகங்களும், கிராமப் பஞ்சாயத்துகளில் நான்கு உணவகங்களும் செயல்படுகின்றன. இந்த எண்ணிக்கையானது பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு உதவும் உதவியாளர்கள், புறநோயாளிகளின் நன்மைக்காக நடத்தப்படும் உணவகங்களையும் உள்ளடக்கியதாகும்.

ஒவ்வொரு உணவகம் மூலமாகவும் சராசரியாக நாளொன்றுக்கு 200 முதல் 400 நபர்களுக்கு முழு உணவு அதிக மானியம் கொடுத்து குறைந்த விலையில் வழங்கப்பட்டுவருகின்றன. கரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலத்திலும், இயற்கைப் பேரிடர்பாடுகள் நேரிடும் காலத்திலும் உணவகத்திற்கு வரும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முழு உணவு விலையின்றி வழங்கப்படுகின்றது.

இந்த உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும், பல்வகை சாதங்கள் (சாம்பார், கருவேப்பிலை, எலுமிச்சை) ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் பகலிலும், இரண்டு சப்பாத்திகள் பருப்புடன் மூன்று ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன.

நாடு முழுவதும் உணவுக்கூடங்கள்

இதன்மூலம் சராசரியாக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.25 முதல் 30 வரை அரசினால் செலவிடப்படுகிறது. தற்பொழுது, இத்திட்டம் மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மாநில அரசு, நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் இதற்காக ரூ.300 கோடி செலவுசெய்கின்றன.

விளிம்புநிலையிலுள்ள வறியவர்களுக்கு உணவுப் பாதுகாப்பினை சமூக உணவகங்கள் மூலமாக உறுதிசெய்திடும் வகையில் இதற்கு முந்தைய கூட்டத்தின்பொழுது குறிப்பிட்டவாறு 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்.

இந்தியா முழுமையும் சேவை வழங்கும் முறையிலான சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கும் திட்டத்திற்கென கீழ்க்காணும் ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன். சமுதாய உணவுக் கூடங்கள் அமைப்பதற்காகத் தேவைப்படும் நிலம், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படலாம்.

பேரிடரில் முக்கியப் பங்காற்றிய உணவகங்கள்

கட்டடம், தளவாடப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட மூலதனச் செலவினங்களும், உணவு தானியங்கள் கொள்முதல், பணியாளர், சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் தொடர் செலவினங்களுக்கும் முழுமையாக நூறு விழுக்காட்டுத் தொகை மத்திய அரசினால் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பயன்தரக்கூடிய வகையில் இந்தச் சமூக சமையல் கூடங்கள் செயல்படுகின்றன. வறிய நிலையிலுள்ள தகுதியான நபர்களே அதிகமாக இதன்மூலம் பயனடைகின்றனர் என்பதே எங்களது அனுபவமாகும். எனவே, இத்திட்டத்தில் பயனாளிகளை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்கள் ஏதும் தேவையில்லை எனக் கருதுகிறேன்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள இதர மாநிலங்களைச் சேர்ந்த குடிபெயர் தொழிலாளர்களும் இதன் வாயிலாகத் தொடர்ந்து பயன்பெற்றுவருகிறார்கள். எங்களது அனுபவத்தில் இயற்கைப் பேரிடர் காலங்கள், ஊரடங்கு காலங்களில் குறிப்பிடத்தக்க வகையில் இத்தகைய சமுதாய உணவகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

சமுதாய உணவகங்கள்: மத்திய அரசு பரிசீலிக்குமா?

எனவே, பயனாளிகளின் எண்ணிக்கை திடீரென உயரும்பொழுது, போதிய உணவு வழங்கும் வண்ணம் இத்திட்டம் போதிய நெகிழ்வுத் தன்மை கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் மூன்று வேளைகளிலும், இதர பகுதிகளில் இரண்டு வேளைகளிலும் உணவு வழங்கப்படுகிறது.

எனவே, குறைந்தபட்சம் இருவேளை உணவு சமூக உணவகங்கள் மூலமாக வழங்கப்பட வேண்டும். இந்தியா போன்ற பரந்துவிரிந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட முறை அல்லது ஒற்றை முறை அனைத்து பகுதிகளுக்கும் ஏற்புடையதாக அமையாது.

எனவே, சமூக உணவகங்களைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்களின் தேவைக்கேற்ப நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய விரிவான விதிமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆலோசனைகள், மத்திய அரசினால் செயல்படுத்தப்படவுள்ள சமுதாய உணவுக் கூடங்களுக்கான திட்டத்தின் அங்கமாக ஏற்பதற்குப் பரிசீலிக்கப்படும் என நான் உறுதிபட நம்புகிறேன்.

தொலைநோக்குப் பார்வையுடன் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலில் மத்திய அரசுடனும், இதர மாநில அரசுகளுடனும் ஒன்றிணைந்து பசிப்பிணி, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதுணைபுரிவோம் என்று நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:நகைச்சுவை பதிவுக்குச் சிறையா? 'மாஜிஸ்திரேட்டின் நியாயமான நடவடிக்கை'க்குப் பாராட்டு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.