ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டை
தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியானின் கனிகம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி
பாதுகாப்புப் படையினரும் அதற்குப் பதிலடி கொடுத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். மேலும் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.
முன்னதாக, நேற்று (டிசம்பர் 25), பாரமுல்லாவின் வானிகம் பயீன் கிரீரி பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜே.எம். உடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டனர்.
இதேபோல், டிசம்பர் 9ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று அல்-பத்ர் பயங்கரவாதிகள் இறந்தனர்.
காவல் ஆய்வாளர் விஜய்குமார் தொலைபேசியில் ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, "பாதுகாப்புப் படை வீரர்கள் சரணடையும்படி பயங்கரவாதிகளிடம் கேட்டுக் கொண்டனர், அதற்கு அவர்கள் மறுத்துவிட்ட நிலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது" என்றார்.
இதையும் படிங்க: 'உங்களுக்கு ஒன்னும் ஆகாது' - பாதுகாப்பு படையினரின் நெகிழ்ச்சி செயல்!