குல்காம்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் இன்று (மே 31) துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், உயர்நிலை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மீது குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியை இந்து என்றும் அவர் ஜம்மூவின் சம்பா பகுதியை சேர்ந்தவர் என்றும் போலீஸ் தரப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றவாளிகள் கூடிய விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.