ETV Bharat / bharat

அரசியலமைப்பை அவமதிக்கும் பாஜக அரசு - மெகபூபா முஃப்தி குற்றச்சாட்டு - ஜம்மு காஷ்மீர் குப்கார் கூட்டணி

மத்திய பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்து வருவதாக, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்ஃதி குற்றம்சாட்டியுள்ளார்.

PDP president Mehbooba
PDP president Mehbooba
author img

By

Published : Dec 29, 2020, 10:01 PM IST

ஜம்மு: அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான குப்கார் கூட்டணி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை மீண்டும் பெற்று தர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாக, அம்மாநில மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்ஃதி தெரிவித்துள்ளார்.

மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து பேசிய அவர், " மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, அது எவ்வாறு அவர்களுக்கு பலன் தரும். மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டங்களை கொண்டுவர நினைத்தால், நீங்கள் அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கிறீர்கள் என்றுதான் பொருள்.

அரசியலமைப்புக்கு உட்பட்டுதான் ரத்து செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை மீண்டும் பெற வேண்டும் என குப்கார் கூட்டணி முயற்சித்து வருகிறது. சிறப்பு தகுதியை பறித்து மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீரை அவமதித்து விட்டது. எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதை தான் நாங்கள் மீண்டும் பெற நினைக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: என்டிடிவி-க்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்த செபி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.