ஜள்காவ்: பட்லி புத்ரக் கிராம மக்கள் தங்கள் பஞ்சாயத்து பிரதிநிதியாக அஞ்சலி பாட்டில் எனும் திருநங்கையை தேர்வு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் அறிவிகப்பட்டு வருகின்றன. ஜள்காவ் நகரம், பட்லி புத்ரக் கிராம பஞ்சாயத்து தேர்தலில் அஞ்சலி பாட்டில் எனும் திருநங்கை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெற்றி குறித்தும், அவரது கனவு குறித்தும் அஞ்சலியிடம் நமது ஈடிவி பாரத் செய்தியாளர் கேட்டதற்கு, எங்கள் கிராம மக்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்ததால்தான் வேட்பு மனு தாக்கல் செய்தேன். மக்கள் அனைவரும் என்னை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். எனக்கு இப்போது பொறுப்பு கூடியுள்ளது.
என் கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். குழந்தைகளுக்கு அனைத்து வசதியும் அடங்கிய அங்கன்வாடி, கிராம மக்களுக்கு முறையான சுகாதார வசதி ஆகியவற்றை முதலில் ஏற்படுத்தித் தர விரும்புகிறேன் என தெரிவித்தார்.
அஞ்சலி தேர்வு செய்யப்பட்டது குறித்து அவரது தோழர் சம்பா பாட்டில், இந்த நாள் எங்கள் சமூகத்தினருக்கு பொன்னான நாள் ஆகும். அஞ்சலியின் வெற்றியால் நாங்கள் பொது சமூகத்தில் ஓர் அங்கமாகின்றோம். இனிவரும் தேர்தல்கள் அனைத்திலும் நாங்கள் பங்கேற்போம் என்றார்.
அஞ்சலியை தேர்வு செய்தது குறித்து கிராம மக்கள், திருநங்கை என்பதற்காக அஞ்சலியை நாங்கள் தேர்வு செய்யவில்லை. கிராம மக்களுக்கு எந்த பிரச்னையானலும் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர். அதனால்தான் அவரை ஒருமனதாக தேர்வு செய்தோம் என்கின்றனர்.
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளின் தாய் திருநங்கை நூரி சலீம்!