புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்தை இன்று (மே.15) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு படக்காட்சிகள் மூலம் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளும், மேம்படுத்தப்பட்ட வசதிகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது. அன்றாடப் பணிகளையும் சவால்களையும் ஆலோசித்த பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை, அலுவலர்களிடம் ”மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இதனையடுத்து புதுச்சேரியைச் சேர்ந்த நிதின் செல்வம், மோகஹிட் செல்வம் என்ற இரு சிறுவர்கள் தங்கள் சேமித்து வைத்த மூன்றாயிரத்துக்கும் மேலான தொகையை கரோனா நிவாரண நிதியாக ஆளுநரிடம் வழங்கினர். அதை பெற்றுக் கொண்ட ஆளுநர் சிறுவர்களைப் பாராட்டினார்.
மக்கள் தாமாகவே கட்டுப்பாட்டோடு இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கரோனா நோயை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருந்து அரசுக்கு ஒத்துழைப்புதர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'டாக் டே' புயல் எதிரொலி: சல்லி சல்லியாக நொறுங்கிய கட்டடம்