ETV Bharat / bharat

ஆம் ஆத்மி - பாஜக கவுன்சிலர்கள் தள்ளுமுள்ளு - கலவர பூமியாக மாறிய மாநகராட்சி கூட்டம்! - delhi mayor election

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி - பாஜக கவுன்சிலர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். சக உறுப்பினருடன் சாண்டையிட்டும் வாக்குப் பெட்டியை பெண் கவுன்சிலர் தூக்கி எறியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

delhi
delhi
author img

By

Published : Feb 23, 2023, 9:46 AM IST

டெல்லி: 250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி மாநகராட்சி தேர்தல் நடந்தது. தேர்தலில் 134 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 15 ஆண்டுகளாக பாஜக கைவசம் இருந்த மாநகராட்சியை தன் வசம் கொண்டு வந்தது. பாஜகவுக்கு 104 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்றதும் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சிகள் அறிவித்தன. மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக மாநகராட்சியின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க.வின் சத்ய சர்மா நியமிக்கப்பட்டது மற்றும் அரசை ஆலோசிக்காமல் 10 நியமன கவுன்சிலர்களை நியமித்தது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக துணை நிலை ஆளுநர் சக்சேனா மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் போக்கு நிலவியது.

இதன் காரணமாக மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் வார்டு உறுப்பினர்களின் தொடர் அமளியால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, டெல்லி மேயர் தேர்தலில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாதவாறு உத்தரவு பெற்றது.

இந்த உத்தரவை தொடர்ந்து டெல்லி மேயர் தேர்தலை நேற்று (பிப்.22) நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. இதில், 150 வாக்குகள் பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஒபராய் மேயராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் மேயர் தேர்தலுக்கான வாக்குபெட்டியை பாஜக உறுப்பினர்கள் திருடியதாக ஆம் ஆத்மி வார்டு உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர். மேலும் மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட வீடியோவை ஆம் ஆத்மி கட்சியினர் வெளியிட்டு உள்ளனர்.

17ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்களை மக்கள் தோற்கடித்து விட்டதாகவும், தற்போது வாக்குபெட்டியை பாஜகவினர் திருடிவிட்டதாகவும் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தன் ட்விட்டர் பக்கத்த்தில் பதிவி வெளியிட்டு உள்ளார்.

  • 17 साल से भाजपा MCD मैं बैठकर दिल्लीवालों को लूटती रही और अब जब जनता ने उन्हें हरा दिया तो स्टैंडिंग कमेटी के चुनाव का बैलेट बॉक्स ही लूट लिया.

    गुंडागर्दी की हद है भाजपा वालों की …. https://t.co/YX6kXqdQuQ

    — Manish Sisodia (@msisodia) February 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாஜக மேயர் வேட்பாளர் ரேகா குப்த, சக பெண் கவுன்சிலர்களுடன் சேர்ந்து மேயர் பயன்படுத்தும் மைக் உள்ளிட்டவற்றை உடைப்பதும், பதவியேற்பு மேடையை தட்டி தள்ளிவிடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஆம் ஆத்மி மட்டும் பாஜக கவுன்சிலர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் மாநகராட்சி கூட்டம் இயங்கா நிலைக்கு தள்ளப்பட்டது.

  • #WATCH | Delhi: Ruckus and sloganeering continue at MCD house as AAP-BJP councillors clash with each other after the house proceedings resumed for the fourth time. The MCD house was again adjourned for the fifth time since last night. pic.twitter.com/O6MO2cOgs1

    — ANI (@ANI) February 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: "ஆர்எஸ்எசின் பிரசார பீரங்கி ஆளுநர் ரவி" - துரை வைகோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.