ETV Bharat / bharat

முதல் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியிலேயே கேரள சபாநாயகரான எம்.பி. ராஜேஷ்

author img

By

Published : May 25, 2021, 10:56 PM IST

15ஆவது கேரள சட்டப்பேரவை சபாநாயகராக எம்.பி. ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

M B Rajesh
M B Rajesh

140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப்பேரவை சபாநாயகராக ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 50 வயது நிரம்பிய ராஜேஷ் போட்டியிட்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுவே.

இதன்மூலம் முதன்முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வாகி, அதே சட்டப்பேரவையில் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட நபர் என்ற பெருமை ராஜேஷூக்குக் கிடைத்துள்ளது.

அதேவேளை, இவர் மக்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திரிதலா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரசின் வி.டி.பலராமைத் தோற்கடித்து இவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.