ETV Bharat / bharat

ஆந்திரா, தெலங்கானாவில் வெப்ப அலையின் கோரத்தாண்டவம் - தொடரும் உயிரிழப்புகள்!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களிலும் வெப்ப அலையால் சுமார் 8 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Burning
ஆந்திரா
author img

By

Published : May 16, 2023, 3:48 PM IST

ஹைதராபாத்: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் சாதாரணமாகவே 40 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமான வெப்பநிலைப் பதிவாகிறது. வெப்ப அலை தாக்கி மக்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கோடை வெயில் கோரத்தாண்டவமாடுகிறது. தெங்கானாவின் கடந்த மூன்று நாட்களாக அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. நேற்று(மே.15) மாநிலத்தின் 11 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டது.

கம்மத்தில் இயல்பை விட 2.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாகப் பதிவாகியுள்ளது. நல்கொண்டாவில் 2.5 டிகிரி செல்சியஸ், மேதக்கில் 1.3 டிகிரி செல்சியஸ் மற்றும் பத்ராசலத்தில் 1.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி இரவு கம்மத்தில் 30 டிகிரி செல்சியஸ், ஹனுமகொண்டாவில் 29.5 டிகிரி செல்சியஸ், ஹைதராபாத் நகரில் 28.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைப் பதிவானது. இவை இரவு நேர இயல்பு வெப்பநிலையை விட அதிகம்.

கடந்த மூன்று நாட்களாக தெலங்கானாவில் வெயிலின் தாக்கம் மோசமாக இருப்பதால், பணிக்குச் செல்பவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாலை 5 மணி வரையிலும் வெப்ப அலை வீசுவதால் வீட்டிலிருக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தச் சூழலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களில், தெலங்கானா மாநிலத்தில் வெப்ப அலை தாக்கி 5 பேர் உயிரிழந்தனர். நல்கொண்டா மற்றும் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கி தலா ஒருவர் உயிரிழந்தனர். அதேபோல், மஞ்சிரியாலா மாவட்டத்தில் ராமகிருஷ்ணாபூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முத்தே சந்தோஷ்(45) என்ற காவலர் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவில் உயிரிழந்தார்.

ஹனுமகொண்டா மாவட்டம், சித்தாபூரில் முசுகு பெண்டு (52) என்ற கூலித் தொழிலாளி, நேற்று வெயிலில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொமரம் பீம் மாவட்டம், காகஜ்நகரைச் சேர்ந்த போச்சையா (74) என்பவர் தனது உறவினரின் திருமணத்துக்குச் சென்ற நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவர் வெப்ப அலையால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தெலங்கானாவைப் போலவே ஆந்திராவிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நெல்லூர், பிரகாசம் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தில் 2 பேரும், ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் ஒருவரும் வெப்ப அலையால் உயிரிழந்தனர். வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். ஹைதராபாத்தில் ஊரடங்கு உத்தரவு போட்டது போல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதையும் படிங்க: உஷாரய்யா உஷாரு!... மேலும் 4 டிகிரி செல்சியஸ் உயரும் வெப்பம்; வானிலை ஆய்வு மையம் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.