ETV Bharat / bharat

'லெஹங்கா' பிடிக்கவில்லை... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! - திருமணம் நின்றது

மணமகன் வீட்டார் வாங்கிய லெஹங்கா மணமகளுக்குப் பிடிக்காமல் போனதால், திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Uk
Uk
author img

By

Published : Nov 9, 2022, 6:45 PM IST

ஹல்த்வானி(உத்தரகாண்ட்): உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியைச்சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அல்மோராவைச்சேர்ந்த இளைஞருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து நவம்பர் 5ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இருதரப்பினரும் பத்திரிகை அடித்தனர். திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

மணப்பெண்ணுக்கு லெஹங்கா வாங்கும் பொறுப்பு மணமகன் தரப்புக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி, மணமகனின் தந்தை லக்னோவில் இருந்து லெஹங்காவை ஆர்டர் செய்திருந்தார். லெஹங்காவின் விலை 10ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதனை மணமகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

லெஹங்காவைப் பார்த்த மணப்பெண் தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மணப்பெண் திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நிறுத்தப்பட்டதாக அறிவித்தனர்.

இதையடுத்து உறவினர்கள் சிலர் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்துவதற்காக, நேற்று(நவ.8) காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு போலீசார் முன்னிலையில் இருதரப்பினரும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அங்கும் தகராறு ஏற்பட்டது.

இதைக்கண்ட போலீசார், இருதரப்பினரையும் சிறையில் அடைப்பதாக எச்சரித்ததையடுத்து அவர்கள் அமைதியாகினர். இறுதியாக திருமணத்தை நிறுத்துவதாக காவல் நிலையத்தில் வைத்து ஒருசேர முடிவு செய்தனர். அதன்படி, லெஹங்கா பிடிக்காமல் போனதால் திருமணம் நின்றது.

இதையும் படிங்க: மனைவி குடும்பத்தை பழிவாங்க திட்டம்...கடத்தப்பட்டதாக நாடகம் ஆடியவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.