ETV Bharat / bharat

உ.பி.  ரசாயன ஆலையில் பாய்லர் வெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு - boiler explosion in chemical factory hapur

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

hapur latest news
hapur latest news
author img

By

Published : Jun 4, 2022, 4:29 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் இன்று (ஜூன் 4) பாய்லர் வெடித்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆலையில் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்ட தகவலில், இந்த விபத்தில் 6 ஊழியர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லி விமான நிலையத்தில் தீ... விசாரணைக்கு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.