ETV Bharat / bharat

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் பலர் வெற்றி

புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் வெற்றிபெற்றுள்ளனர்.

author img

By

Published : May 2, 2021, 4:25 PM IST

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் வெற்றி

புதுச்சேரியில் இன்று (மே 2) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. காங்கிரஸ் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்து, மண்ணாடிபட்டு தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட நமச்சிவாயம் வெற்றிபெற்றுள்ளார்.

இதேபோல, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்து, காமராஜர் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ஜான் குமாரும் வெற்றிபெற்றுள்ளார்.

இதனால், என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் பாஜக வேட்பாளர்கள் 2 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

மேலும் காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் திருமுருகன் வெற்றிபெற்றுள்ளார்.

மங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் தேனீ ஜெயக்குமார் வெற்றிபெற்றுள்ளார்.

நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சந்திரபிரியங்கா வெற்றிபெற்றுள்ளார்.

கதிர்காமம் சட்டப்பேரவைத் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் வெற்றிபெற்றுள்ளார்.

இதையும் படிங்க: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.