ETV Bharat / bharat

மனதின் குரல்: ராணுவ வீரர்களின் தாய்மார்களை நினைவுகூர்ந்த பிரதமர்!

author img

By

Published : Nov 28, 2021, 3:47 PM IST

மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜான்சி, பந்தேல்கண்ட் ஆகிய இடங்களை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தோன்றிய விடுதலைப் போராட்ட வீரமங்கைகளான ராணி ரக்ஷிமிபாய், ஜல்கரி பாய் ஆகியோரை நினைவு கூர்ந்தார்.

Mann ki Baat, PM Modi, Pays tributes of soldiers, Rani Laxmi bai, பிரதமர் நரேந்திர மோடி உரை, பிரதமர் நரேந்திர மோடி வானொலி உரை, மான் கி பாத், மனதின் குரல், ராணி லக்ஷ்மிபாய், ஜல்கரி பாய், பிரதமர் மோடி உரை
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்திவருகிறார்.

அந்த வகையில் இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "1971 போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதன் 50ஆவது ஆண்டு விழா அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இந்தச் நேரத்தில், ராணுவ வீரர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டிசம்பரில் கடற்படை தினம் மற்றும் ஆயுதப்படை கொடி தினத்தை கொண்டாடுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில், நமது ஆயுதப் படைகளை, நமது வீரர்களை நான் நினைவு கூர விரும்புகிறேன். குறிப்பாக, இந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த துணிச்சலான தாய்மார்களை போற்றி வணங்குகிறேன்.

ராணி லக்ஷ்மிபாய் மற்றும் ஜல்காரி பாய் போன்ற சுதந்திர போராட்ட வீராங்கனைகளை ஈன்றெடுத்த பெருமைக்குரிய மண் ஜான்சி மற்றும் பந்தேல்கண்ட். கேல் ரத்னா மேஜர் தயான் சந்த் போன்றோரையும் இந்தப் பகுதிகள் நமக்குப் பரிசாகக் கொடுத்துள்ளன," என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஜலானில் நூன் நதி என்று ஒரு நதி இருந்தது. படிப்படியாக, நதி அழிவின் விளிம்பிற்கு சென்றது. இது அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நெருக்கடியை உருவாக்கியது.

ஜலான் மக்கள் இந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்து நதியை மீட்டெடுத்தனர். இது 'அனைவரின் ஆதரவு இருந்தால் அனைவருக்குமான வளர்ச்சியை அடையலாம்' என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இன்று, இந்தியாவில் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பை கொண்ட 70க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. பல இந்தியர்கள் தங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறார்கள்," என்றார்.

இதையும் படிங்க: ’இந்தியாவில் ஸ்டார்ட் அப் கலாச்சாரம் துடிப்பாக உள்ளது’ - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.