ETV Bharat / bharat

மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம்... முக்கிய குற்றவாளி கைது - போலீசார் தகவல்!

மணிப்பூர் கலவரத்தில் குக்கி இன பெண்களை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தில் தொடர்புடைய முக்கியமான நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Manipur
Manipur
author img

By

Published : Jul 20, 2023, 6:03 PM IST

Updated : Jul 20, 2023, 6:37 PM IST

ஐதராபாத் : மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக இழுத்தச் செல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் 3ஆம் தேதி முதல் கலவரம் வெடித்து வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.

இந்நிலையில், மணிப்பூர் கலவரத்தில் குக்கி இனத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் அடித்து துன்புறுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. அந்த இரு பெண்கள் பலமுறை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கியமான நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்து உள்ளனர். குக்கி இன பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோவில், பழங்குடி பெண்ணை பிடித்து இழுக்கும் பச்சை நிற டி-ஷர்ட்டை அணிந்தவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வீடியோ வைரலானதை அடுத்து இன்று (ஜூலை. 20) காலை முதலே மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட நபர் ஹ்யூரெம் ஹீரோதாஸ் மெய்தீ என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவத்திற்கு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். மணிப்பூர் கலவரம் தொடர்பான விவகாரத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக பிரதமர் மோடி மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், இன்று (ஜூலை. 20) நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்பாக பேசிய பிரதமர் மோடி, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானம் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்றார்.

அதேபோல், குக்கி இன பெண்களுக்கு நடந்த கொடுமைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், கலவரங்களில் பெண்களை ஆயுதமாக பயன்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார். மேலும் இந்த சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாகவும் இது போன்ற மனித உரிமை மீறல்களில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டா, நீதிமன்றம் தலையீட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதையும் படிங்க : டெல்லி அவசர சட்ட விவகாரம்... உச்ச நீதிமன்றம் கறார்... ஆம் ஆத்மிக்கு பின்னடைவு!

இதையும் படிங்க : Brij Bhushan singh: மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்.. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு ஜாமீன்!

Last Updated : Jul 20, 2023, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.