ETV Bharat / bharat

ஒரே ஒரு போட்டோ தான்.. மம்தா பானர்ஜி பற்ற வைத்த நெருப்பு.. பா.ஜ.தலைவர்களின் ரியாக்‌ஷன் என்ன?

author img

By

Published : May 30, 2023, 4:16 PM IST

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எவ்வித தலைப்பும் இடாமல், டுவிட்டரில் பதிவு செய்துள்ள ஒரு போட்டோ, பாரதிய ஜனதா கட்சி தலைவர்களிடையே, பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

mamata photo without caption raises speculation- suvendu counter replies
மம்தா பற்ற வைத்த நெருப்பு ஒன்று....- பா.ஜ.,தலைவர்களின் ரியாக்‌ஷன்!

கொல்கத்தா: ஒரு போட்டோ, ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பார்கள், அது உண்மைதான் என்பதை நிரூபித்து உள்ளது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தலைப்பு ஏதும் இடாமல், ட்விட்டரில் பதிவிட்டு உள்ள போட்டோ. அந்த வகையில், தலைநகர் டெல்லியில், பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா, கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு, நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதிக்கே அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து 20 சைவ மட ஆதீனங்கள், மதகுருமார்கள், பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர். இந்த நிகழ்விற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு, அழைப்பு விடுக்காததை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், இந்நிகழ்வை புறக்கணித்திருந்தது.

இந்நிலையில், சுதந்திரத்திற்குப் பிறகு என்ற பெயரில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் இருப்பது போன்று ஒரு போட்டோவும், அதன் கீழ்பகுதியில், மே 28ஆம் தேதி நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், பிரதமர் மோடி, ஆதீனங்களுடன் இருப்பது போன்று ஒரு போட்டோவும், சமீபகாலமாக, சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மம்தா ட்வீட்: இந்த போட்டோவை, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எவ்வித தலைப்பும் இடாமல், ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார். மம்தா பானர்ஜியின், இந்த போட்டோ ட்விட்டிற்கு, 47 ஆயிரம் பேர் லைக் செய்திருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி, இந்த விவகாரத்தை, பெரும் பேசுபொருளாக மாற்றி உள்ளது.

டைம் இல்லை: மம்தா பானர்ஜியின் ட்விட்டுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள மேற்குவங்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, அந்த போட்டோவில் இடம்பெற்றுள்ள நபர்களை, மம்தா கேலி செய்வதோடு, மரபுகளை அவமதிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

  • I am not surprised at @MamataOfficial's monocular (one-eyed) perception. She is well known for her distastefulness towards Sanatani traditions, that's why she is mocking these Saints.

    The Adheenam Heads from Tamil Nadu attended the inaugural event yesterday for presenting the… https://t.co/uirJtOEbTk

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சுவேந்து அதிகாரி, இதுதொடர்பாக வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மம்தா பானர்ஜி, சனாதன மரபுகள் மீது வெறுப்பு கொண்டவராக உள்ளார். அவர் புனிதர்களை கேலி செய்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது, 12 மத தலைவர்கள் கலந்து கொண்ட சர்வ மத பிரார்த்தனை நடந்தது என்பதை மம்தாவிற்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மிகப் பெரிய புனிதர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தர் பிறந்த மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

  • It is not surprising that a Chief Minister, who detests her own people, presides over their brutal rape and murder, has no love lost or respect for the people of Tamilnadu. It is futile to expect Mamata Banerjee, who is corrupt to the core, to understand what a life of sacrifices… https://t.co/g9dYOhLm2I

    — Amit Malviya (@amitmalviya) May 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாரதிய ஜனதா பிரமுகர் அமித் மால்வியா வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது, தன் சொந்த மக்களையே வெறுக்கும், அவர்களின் கொடூரமான வன்கொடுமை மற்றும் கொலைகளுக்கு தலைமை தாங்கும் ஒரு முதலமைச்சருக்கு, தமிழக மக்கள் மீது அன்பும் மரியாதையும் இல்லாமல் போனதில் ஆச்சரியமில்லை. தியாக வாழ்வு என்றால் என்ன என்பதை மம்தா பானர்ஜி புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீணானது என்று சாடியுள்ளார்.

மேலும், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பலதரப்பட்ட மக்கள்தொகை மற்றும் இந்து மறுமலர்ச்சியின் வளமான பாரம்பரியம் கொண்ட மாநிலம், இந்த புனிதர்களை கேலி செய்வதைப் பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது. மேற்குவங்க மாநிலம், தன் மதவெறி சிந்தனையை விட்டொழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: எவரஸ்ட் சிகரம் தொட்ட முத்தமிழ் செல்விக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.