கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 இடங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில், 213 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. மே 3ஆம் தேதி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பெயரில், இன்று காலை 10.45 மணியளவில் மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் நாளை (மே 6) சட்டப்பேரவையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
-
Congratulations to Mamata Didi on taking oath as West Bengal’s Chief Minister. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to Mamata Didi on taking oath as West Bengal’s Chief Minister. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 5, 2021Congratulations to Mamata Didi on taking oath as West Bengal’s Chief Minister. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 5, 2021
மம்தா முதலமைச்சராக பதவியேற்றதற்கு, பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மராத்தா சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!