திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. இன்று மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, ஐப்பனுக்கு தங்க நகைகள் அடங்கிய திருவாபரணங்கள் அணிவித்து பத்தனம்திட்டா பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று திருவாபரண ஊர்வலம் எடுத்துச்செல்லப்படுகிறது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள், 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மகர விளக்கு பூஜையிலும், மகரஜோதி தரிசனத்திலும் கலந்துகொள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவை தருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: HOROSCOPE: காதல், புகழ் யாருக்கு கைகூடும்.. 12 ராசிக்கும் பொங்கல் பலன்கள் இதோ!