ETV Bharat / bharat

தெலங்கானா கார் விபத்து: 6 வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Dec 2, 2020, 10:54 AM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் ஆழ்துளை வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஆறு வயது குழந்தை உள்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தெலங்கானா கார் விபத்து
தெலங்கானா கார் விபத்து

தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் செவெல்லா மண்டலம் என்னும் பகுதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஆழ்துளை வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில், காரிலிருந்த ஆறு வயது குழந்தை உள்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உயிருக்குப் போராடிய நிலையிலிருந்த மூன்று பேரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தெலங்கானா கார் விபத்து

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கு ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பைச் சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தென்பழனி அடிவாரத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.