ராய்பூர்: சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் நேற்று இரவு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரஷாந்த் அகர்வால் கூறுகையில், "சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் விமான பயிற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகள் ஸ்ரீவஸ்தவா மற்றும் பாண்டா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர் என தெரிவித்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இரு விமானிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், இருவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாக தெரிமவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீனாவில் ஓடுபாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்