ETV Bharat / bharat

புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் சீமானுக்கு கண்டனம்! - Congress Leaders

அண்மையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காங்கிரஸ் தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரின் இப்பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளையும் கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றார்கள்.

புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ்
புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ்
author img

By

Published : Oct 14, 2021, 6:45 PM IST

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியைப் பற்றி தரக்குறைவாகப் பேசும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்ச காந்தி, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''காங்கிரஸ் கட்சியைப் பற்றியும் நேருவின் குடும்பத்தைப் பற்றியும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைகள்தோறும் தரக்குறைவாகப் பேசி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் மற்றும் வரலாறு தெரியாமல் சீமான் உளறி வருவது கண்டனத்திற்குரியது.

இத்தோடு சீமான் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பேசினால் புதுச்சேரியில் மாநில அளவில் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி சீமானுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்" என்று எச்சரித்தார்.

புதுச்சேரி மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்

சீமான் போன்று எங்களுக்கும் அவரைப் பற்றியும் அவரது கட்சியைப் பற்றியும் பேசத் தெரியும். ஆனால், அரசியல் நாகரிகம் கருதி, அதை எல்லாம் பேசக்கூடாது என்று மகிளா காங்கிரஸ் நினைக்கிறது.

சீமான் அடங்கவில்லை என்றால், மகிளா காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்து நாங்களும் சீமானை பற்றி தரக்குறைவாக பேசுவோம்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை காவல் ஆணையருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவு - நலமுடன் இருப்பதாகத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.