ETV Bharat / bharat

உலகில் முதல் முறையாக எச்ஐவி பாதித்த தம்பதிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை!

உலகிலேயே முதல் முறையாக எச்.ஐ.வி பாதித்த கணவருக்கு, அதே நோயால் அவதிப்பட்டு வரும் மனைவி கிட்னி வழங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

கிட்னி மாற்று அறுவை சிகிச்சை
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை
author img

By

Published : Feb 10, 2023, 1:48 PM IST

நாக்பூர்: உலக முழுவதும் இந்த வாரம் காதலர் தின வாரமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த காதலுக்கே மகாராஷ்டிரத்தை சேர்ந்த தம்பதி புனிதம் சேர்த்துள்ளனர். கணவருக்காக மனைவி எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை மீண்டும் ஒரு முறை வரலாற்றி நிரூபணமாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சச்சின் - சோனி தம்பதி. பருத்தி வியாபாரியான சச்சின் எச்.ஐ.வி பாசிடிவ் நோயாளி ஆவார். அவரது மனைவி சோனிக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.விக்காக ஆன்டிரிடிரோவைரல் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

தொடர் மருத்துவம், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களில் சச்சின் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்த சச்சின் கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கிட்னி செயலிழந்து விட்டதாக அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சச்சினின் கிட்னி முற்றிலும் செயலிழந்ததாக சொல்லப்படுகிறது. அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்ட நிலையில், அவரது உடலுக்கு பொருந்தும் வகையிலான கிட்னியை தேடும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உயிருக்கு போராடி வரும் தன் கணவருக்கு, கிட்னி வழங்க சோனி முன் வந்துள்ளார். அவருக்கும் எச்.ஐ.வி தொற்று உள்ள நிலையில், அறுவை சிகிச்சையால் போது பல்வேறு அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சச்சினுக்கு பி பிரிவு ரத்தமும், சோனிக்கு ஏ பிரிவு ரத்தமும் இருந்த நிலையில், பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 18ஆம் தேதி அவுரங்கபாத் மருத்துவமனையில் இருவருக்கும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து நிலையில் தம்பதி இருவரும் நல்ல உடல் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், மருத்துவ வரலாற்றிலேயே எச்.ஐ.வி பாதித்த மற்றும் மாற்று ரத்த மாதிரிகளை கொண்ட இருவருக்கு கிட்னி மாற்று சிகிச்சை முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அண்மையில் இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், பூரண நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: GIS2023: உ.பி.யில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.