ETV Bharat / bharat

கண்களை கட்டிக்கொண்டு ’ரூபிக் கியூப்’ - சச்சினை திகைக்க வைத்த மும்பை சிறுவன்!

author img

By

Published : Jun 23, 2021, 4:00 PM IST

மும்பை (மகாராஷ்டிரா): கண்களை திறந்து கொண்டு ’ரூபிக் கியூப்’ விளையாடுவதே மிகக் கடினமான செயலாக பார்க்கப்படும் நிலையில், மும்பையில் வசிக்கும் 16 வயது சிறுவன் ஒருவர், தன் கண்களை கட்டிக்கொண்டு வெகு சில நிமிடங்களில் இந்தப் புதிரை விடுவித்து ஆச்சரியப்படுத்துகிறார்!

கண்களை கட்டிக்கொண்டு கடினமான ’ரூபிக் கியூப்’ புதிர் விளையாட்டில் கலக்கும் சிறுவன்

ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலை பேராசிரியரான எர்னோ ரூபிக் என்பவர், 1974ஆம் ஆண்டில் ஒரு ஆள் உயரத்தில் வெவ்வேறு நிற சதுரங்களை உள்ளடக்கிய கனசதுர (Cube) வடிவிலான ஒரு புதிர் விளையாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது நினைவாக பின்னாளில் புகழ்பெற்று, இன்று பல சிறார்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரின் கைகளிலும் தவழும் புதிர் விளையாட்டு தான் ரூபிக் கியூப்.

கண்களை கட்டிக்கொண்டு புதிர் விளையாட்டு

’ரூபிக் கியூப்’ விளையாட்டில் கனசதுரங்களை ஒன்றாக்கி புதிரை விலக்குவதற்கு பொதுவாக அதிக நேரமும், கவனமும், இடைவிடாத முயற்சியும் தேவை. இந்நிலையில், மும்பையில் வசிக்கும் 16 வயது முகம்மது ஐமன் கோலி எனும் சிறுவன், தன் கண்களைக் கட்டிக்கொண்டு வெகு சில நிமிடங்களில் இந்தப் புதிரை விடுவித்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

கண்கள் திறந்த நிலையிலேயே இந்த விளையாட்டை விளையாடுவது ஆகக் கடினமான செயலாக உள்ள நிலையில், கண்களை மூடிக்கொண்டு முகமது ஐமன் கோலி கண்களை கட்டிக்கொண்டு இந்தப் புதிர் விளையாட்டை விளையாடுவது, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட பலரையும் திகைக்க வைத்துள்ளது.

ஆச்சரியத்தில் உறைந்த சச்சின்

முகம்மது ஐமன் கோலி, ரூபிக் கியூப் விளையாடும் வீடீயோ ஒன்றைப் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், சிறுவனின் இந்த வீடியோ தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2019ஆம் ஆண்டு 15.56 வினாடிகளில் இந்தப் புதிரைத் தீர்த்து கின்னஸ் புத்தகத்தில் அய்மான் இடம்பிடித்தார்.

இந்நிலையில், ரூபிக் கியூப் மீதான தனது ஆர்வம் நமது ஈடிவி பாரத் உடன் பேசிய அவர், குறித்துப் பேசிய ஐமன், "ஒன்பது வயதிலேயே ரூபிக் கியூப் மீது என் ஆர்வம் குவியத் தொடங்கிவிட்டது. எனது பொழுதுபோக்கை ஒரு கலையாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தவர் எனது தாய் தெஹ்ஸீப் கோலி தான்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’கோவாக்சின்’ தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி: ஆர்வம் காட்டும் WHO

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.