டெல்லி: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது.
இந்த தொற்றுகளும் ஓய்ந்த நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வெறும் 2 வாரத்தில் 100 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 653ஐ எட்டியுள்ளது. குறிப்பாக, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேருக்கும், டெல்லியில் 165 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும், தெலங்கானாவில் 55 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், ராஜஸ்தானில் 46 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் பெரும்பாலான மாநிலங்கள், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்.
இதையும் படிங்க: Omicron Spreads: இரவு நேர ஊரடங்கு நடைமுறை