மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் காவலர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து பேசிய அம்மாநில காவல் துறை தலைவர் சஞ்சய் பாண்டே, "பெண் காவல் பணியாளர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 12 மணிநேரம் அவர்களுக்கு பணி. தற்போது, அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் உத்தர் தாக்ரே, மாநில உள்துறை அமைச்சர் திலிப் வால்சே படில் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, பாரமதி தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த அறிவிப்பின் மூலம் பெண் காவலர்களின் குடும்ப சூழல் மேன்மை பெறும். அவர்கள் பணியில் தீவிர கவனம் செலுத்த முடியும்" என்று தெரிவித்தார்.
சுப்ரியா சுலே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மகள் ஆவார். இக்கட்சியானது தற்போது ஆட்சியிலுள்ள சிவ சேனாவுடன் கூட்டணியில் உள்ளது.
இதையும் படிங்க: அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை!